
ஏசி பயன்படுத்துவதன் மூலம் முதலில் ஆரோக்கியம் கெடுதல் மற்றும் நோய் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது..
இத்தாலியில் உள்ள மிலனில் லெஜியோனேயர்ஸ் நோய் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த நோயினால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
லெஜியோனேல்லா என்ற பாக்டீரியாவால் பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், பெரும்பாலும் இந்த நோய்கள் ஏர் கண்டிஷனர்கள் மூலமாக பரவியது என்றும் கூறியுள்ளனர், இந்த தொற்று முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தென்படும் என்றும் பிறகுதான் இதற்கான முழு அறிகுறியும் தெரிகிறது என்று அந்த மருத்துவர்கள் நிகழ்த்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது இதனால் ஏசி போடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது ஏசி போடுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்..!!