ஏரி மண் கொள்ளையால் துயரம்..!! ஏரியில் குளிக்கச்சென்ற 2 சிறார்கள் பரிதாப பலி.!! பெற்றோர்களே கவனம்.!!

மழை காலங்களில் சிறார்களை ஏரி, குளம் போன்ற நீர் நிரம்பிய இடங்களுக்கு தனியாக செல்ல அனுமதிப்பது விபரீதத்திற்கு வழிவகை செய்யலாம் என்பதால் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் நேரு வீதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் இவரின் மகன் துரைப்பாண்டி என்கின்ற அரவிந்த் (வயது 13) இவர் அங்குள்ள குமாரமங்கலம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். அதேபோல் செங்குறிச்சி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார் இவரின் மகன் செல்வகுமார் (வயது 11) இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

அரவிந்தும், செல்வகுமாரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இருவரும் நண்பகல் 12:00 மணி அளவில் செங்குறிச்சி ஏரியில் குளிக்க சென்று மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் சிறுவர்களை தேடிய போது இருவரின் சடலமும் ஏரியில் மிதந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர்களின் உடலை மீட்டு ஏரி கரையில் கிடத்தி கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே சிறார்கள் உயிரிழந்த தகவல் கிராமத்தினர் இடையே தெரிய வரவே அவர்கள் மருத்துவமனைக்கு வந்து போராட்டம் நடத்தினர். மேலும் ஏரியில் மண் திருடி கொள்ளையில் ஈடுபட்டதால் தான்  சிறுவர்களின் உயிரிழப்புகள் காரணம் எனவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

Read Previous

மகன்களின் திருமணத்தை பார்க்கும் முன்பே மறைந்த விஜயகாந்த்..!! சோகத்திலும் சோகம்.!!

Read Next

உளுந்தூர்பேட்டை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு அஞ்சலி..!! கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular