ஏர் இந்தியா விமானம் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே விமான சேவையை வழங்கி வருகின்றது, இந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு பரிமாறப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நாட்களாகவே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளில் அருவருக்கத்தக்க பொருட்கள் மற்றும் உயிர் இழந்த பூச்சிகள் போன்றவை இருப்பது மிகவும் கொடுமையானது. சமீபத்தில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் துண்டான விரல், பூரான் ஆகிய இவை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஏர் இந்தியாவில் ஏஐ 175 விமானத்தில் பெங்களூரில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு மதுரேஸ் பால் என்கின்ற பத்திரிக்கையாளர் ஒருவர் அண்மையில் பயணம் செய்துள்ளார். அவர் விமான பயணத்தின் போது அவருக்கு பரிமாறுப்பட்ட உணவை சாப்பிட்டு கொண்டிருந்தபோது வாய்க்குள் உலோகப் பொருள் ஒன்று சிக்கியது.
உலகத்துண்டு தொண்டைக்குள் நழுவு முன் சுதாரித்து அதனை பரிசோதித்த போது அந்த உலகப்பொருள் பிளேடு ரகத்தை சார்ந்தது என தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் அதிர்ஷ்டவசமாக அந்த பிளேடு போன்ற பொருள்கள் எனது வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறி உள்ளார். இதுவே ஒரு குழந்தையாக இருந்தால் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்..? என்று தனது அதிர்ச்சியான அனுபவத்தை பதிவிட்டதோடு அதை தொடர்புடைய படங்களையும் பகிர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பு உள்ளார் மதரேஸ் பால்.