ஏற்காடு கோர பேருந்து விபத்து..!! டிரைவரின் லைசன்ஸ் ஐந்து ஆண்டு ரத்து..!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் அருகே உள்ள ஏற்காடு மலையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாலை ஐந்து மணிக்கு ஒரு தனியார் பேருந்து சேலம் நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தை மணி என்கின்ற ஓட்டுனர் இயக்கி வந்துள்ளார்.

இவர் சேலத்தை சார்ந்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மலையின் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது 05. 40 மணியளவில் திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. 13வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 12 ஆவது கொண்டை ஊசி வளைவைத் தாண்டி 11-வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் இப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் தந்த தகவலை அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 11 வயதுடைய சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாய் உயிர் இழந்தனர், மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் இழந்தனர், இந்த விபத்துக்கான விசாரணையில் அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றியதும் வளைவில் அதிவேகமாக திரும்பியதில் ஸ்டேரிங் ராட் உடைந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த விபத்துக்கு முழு பொறுப்பு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு என்று கூறி ஓட்டுநர் லைசன்ஸ் 5 ஆண்டுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read Previous

உதவி செய்வது போல் நடித்து முதியவரின் ஏடிஎம்மில் பணத்தை ஆட்டைய போட்ட இளைஞர் கைது..!!

Read Next

அரசியலில் ரீ என்றே தரும் சசிகலா..!! நான் ஜாதி அரசியல் செய்யவில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular