
- ஏலக்காயில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பயன்கள்.!
ஏலக்காய் ஒரு மசாலா பொருளாகும். ஏனெனில் இது உணவிற்கு தேவையான சுவையையும், மணத்தையும் கொடுக்கிறது. ஆனால் ஏலக்காயில் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஏலக்காய் சத்துக்களின் களஞ்சியமாகும். பச்சை ஏலக்காயை உண்பதால் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். ஏனெனில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம் பொட்டாசியம் போன்ற பல தனிமங்கள் ஏலக்காயில் உள்ளது.
ஏலக்காயில் ஆன்டி பாக்டீரியா உள்ளதால் பாக்டீரியா நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆன்டி-மைக்ரோபியல் இருப்பதால் தொற்று நோயை தடுக்க பயன்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை ஏலக்காய் சாப்பிடுவதால் நன்மை பயக்கிறது. பச்சை ஏலக்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளியாக இருந்தால் தினமும் பச்சை ஏலக்காய் சாப்பிடலாம்.
மேலும், இதயம் ஆரோக்கியமாக இருக்க பச்சை ஏலக்காய் சாப்பிடலாம். பச்சை ஏலக்காய் ஆக்சிஜனேற்றக் கூறுகளின் சிறந்த மூலதனமாக இருக்கிறது.பல் ஆரோக்கியத்திற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் பலர் பச்சை ஏலக்காயை பயன்படுத்துகின்றனர்.