ஏழு நாட்களில் சிறுநீரக கற்களை காணாமல் செய்யும் அற்புத மூலிகை..!!

யானை நெருஞ்சில் செடி பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காட்டுப் பகுதிகளில் காணப்படும் இந்த யானை நெருஞ்சில் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாய் பயன்படுகிறது. நெருஞ்சில் மூலிகை மூன்று வகை உள்ளது அதன்படி சிறுநெருஞ்சில், செப்பு நெருஞ்சில் மற்றும் யானை நெருஞ்சில் இதில் யானை நெருஞ்சில் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

யானை நெருஞ்சில் சிறுநீரக கற்களை கரைக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சிறிய முதல் பெரிய கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் எளிதாக கரைக்க யானை நெருஞ்சலை பயன்படுத்தலாம். இந்த யானை நெருஞ்சில் அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் அளவு கொண்ட கற்களை கரைக்கும் வல்லமை கொண்டது. இதில் பெரிய கற்களை கரைக்க குறைந்தது 21 நாட்கள் உண்ண வேண்டும்.

யானை நெருஞ்சில் செடியில் ஒரு கொத்து அல்லது 10 இலைகள் பறித்து கசக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக  கலந்து வைக்க வேண்டும் .சிறிது நேரத்தில் அந்த தண்ணீரை எண்ணெய் போல் மாறிவிடும். இந்த தண்ணீரை மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வருவதால் சிறிய அளவிலான கல்லாக இருந்தால் வெறும் ஏழு நாட்களில் கரைந்து விடும். பெரிய கல்லாக இருந்தால் குறைந்த பட்சம் 21 நாட்கள் குடிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த மருந்தை எடுத்துக் கொள்வதன் முன்பு ஸ்கேன் செய்து கல்லின் அளவுக்கு ஏற்ப ஏழு நாட்களோ அல்லது அதற்கு அதிகமான நாட்களோ குடித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்து கொள்ளலாம். அதேபோல் யானை நெருஞ்சில் இலையை தண்ணீருக்கு பதிலாக பழைய சோற்று நீர் அல்லது மோரில் கலந்து வடிகட்டி குடிக்கலாம். மேலும் யானை நெருஞ்சில் நிலையை இளநீரில் கலந்து அரை மணி நேரம் கழித்து வடிகட்டி குடிக்கலாம்.

யானை நெருஞ்சில் மூலிகை சிறுநீரக கற்களை கரைப்பதற்கு மட்டுமல்லாமல் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. டயாலிசிஸ் செய்பவர்கள் யானை நெருஞ்சில் உட்கொண்டு வருவதால் சிறுநீதம் நாளுக்கு நாள் சரி  ஆகும்.

Read Previous

உடலை வலுவாக்கும் முருங்கைக் கீரையின் அற்புத பயன்கள்..!!

Read Next

நித்தியானந்தா சகவாசம் – பராகுவே வேளாண் அமைச்சர் பதவி பறிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular