ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 18 இந்திய பெண்கள் மீட்பு? வைரல் வீடியோவின் உண்மை என்ன?

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிரியா நாட்டில் ராணுவம் மற்றும் ஐநா குழுவினர் சேர்ந்து ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளின் முகாமை கண்டறிந்து அங்கு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். அவர்களால் பிணைய கைதியாக வைக்கப்பட்டிருந்த யேசிடி பெண்கள் 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் 2022 ஆம் காலத்தில் மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்பட்டது. மேலும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இந்த வீடியோ மற்றொரு பெயரில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது இந்தியாவை சார்ந்த 18 பெண்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடிமையாக வைத்துள்ளதாகவும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் உள்ள கூற்றுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பது நமது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2022ல் எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரப்பரப்பை உண்டாக்க வேண்டும் என்ற பெயரில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Read Previous

தளபதி விஜயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த நபர் யார்.? மனைவியிடம் கூட பேச முடியாதாமே.!!

Read Next

ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை..!! தந்தை அதிர்ச்சி செயல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular