“ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பதே ஆசை” – 500 க்கு 492 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ரிஷி.!!

ஜெஇஇ நுழைவுத் தேர்வு எழுதி ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்னது என்பது தனது ஆசை. எதிர்காலத்தில் அதை நிறைவேற்றுவேன் என்ற உறுதியை எடுத்துள்ள மாணவர் ரிஷியின் விடா முயற்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் எஸ் ஆனந்த் இவரின் மனைவி எஸ் எஸ் பிருந்தா இந்த தம்பதிகளின் மகன் ஏ பி ரிஷி (வயது 15) அங்குள்ள ஜெயின் அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023- 2024-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்து படிப்பில் படு சுட்டியாக இருந்து வந்த மாணவர் ரிஷி இலட்சக்கணக்கான மாணவர்களில் ஒருவராக பொதுத்தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். அவரின் பெற்றோரும் மகனின் மதிப்பெண்ணுக்காக காத்திருந்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் மாணவன் ரிஷி 500 மதிப்பெண்களுக்கு 492 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தார். இவர் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவராகவும் இருந்தார். கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள ஏ பி ரிஷி எஞ்சிய பாடங்களில் 97 மதிப்பெண்களை கடந்துள்ளார். இதனால் மாணவர், அவரின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் மகிழ்ச்சி அடைந்து தங்களின் பாராட்டுகளை மாணவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றது குறித்து மாணவன் ரிஷி கூறுகையில் “நான் இந்த மதிப்பெண் பெறுவதற்கு காரணம் தொடர்ந்து பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருந்தேன். நான் படிக்கும்போது அதை புரிந்து கொண்டு ஒரு மனதோடு பயின்றேன். தேர்வு விடைத்தாளில் எனது  முன்னிலைப்படுத்ததலையும் திறம்பட வெளிப்படுத்தி இருந்தேன். எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் கணினி அறிவியல் கணிதத் துறையை தேர்வு செய்து படிக்க விரும்புகிறேன். இந்த படிப்பு நிறைவு பெறும் காலத்தில் உயர் கல்விக்கான ஜெ இ இ நுழைவு தேர்வு எழுதி ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் இதுவே எனது ஆசை அதற்காக எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது பெற்றோர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

Read Previous

தாய்ப்பாசத்தால் கொலையாளியான 17 வயது மகன்.!! தாயை கண்முன் அடித்த ரௌடியை நண்பருடன் சேர்த்து கொன்ற பயங்கரம்.!!

Read Next

அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்..!! ஆளுநர் மளிகை விளக்கம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular