ஐசிசி தரவரிசை பட்டியல்: சூர்ய குமாரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட்..!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐசிசியானது T20 போட்டியில் சிறந்த விளங்கிய வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 76 ரன்களை விளாசியதின் மூலம், 844 புள்ளிகளுடன் நம்பர் 1. இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் (842) 2-வது இடத்தில் உள்ளார். இதை அடுத்து இங்கிலாந்து வீரர் பிலிப் சால்ட் (816) மூன்றாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (755 புள்ளிகள்) 4 வது இடத்திலும், முகமது ரிஸ்வான் (746 புள்ளிகள்) 5 வது இடத்திலும் உள்ளார்கள். T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்று இருப்பது சிறப்பிற்குரியது.

Read Previous

உள்ளங்கை தோல் உரியுதா?.. அதற்கு இது தான் காரணம்..!!

Read Next

அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இது தான் நடக்கும்.. ரூல்ஸ் சொல்வது என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular