
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது T20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் T20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது. இதில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
அதாவது ஹர்திக் பாண்டியா 222 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதே நேரத்தில் இலங்கை விரல் வனித் ஹசரங்கா (222) தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (211) 3வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் அக்சர் படேல் 164 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளார். வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் T20 தொடரில் மோத இருப்பதால் இப்போட்டிக்கு பிறகு தரவரிசையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.