
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. இதில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது பற்றிய விபரம் வருமாறு…
ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவது பலருக்கும் கனவாக இருக்கிறது. நம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் டிசிஎஸ், காக்னிசண்ட், ஜோஹோ, எச்சிஎல் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன..
காக்னிசண்ட் (Cognizant) நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.காக்னிசண்ட் ஐடி நிறுவனம் தற்போது 17 ஸ்கில்செட் உள்ளவர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளது. அதன்படி Databricks,
python,
snowflake,
IICS,
MSBI, PYspark,
ETL Testin,
Azure Data Factory,
Informatica,
Google Bigquery, DB Scripign,
Big Data, Tableau, GCP services, Spark/SCAla, Teradata, Palantir
உள்ளிட்ட ஸ்கில்செட் உள்ளவர்கள் மட்டும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மற்றவர்களுக்கு இந்த இண்டர்வியூவில் பங்கேற்க அனுமதி என்பது கிடையாது. அதோடு அவர்களுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (பிப்ரவரி 22) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Face To Face முறையில் நடக்கும்…
இந்த பணியை விரும்புவோர் Resume-யை Arunadevi.e@cognizant.com முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு Resume, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு செல்வது நல்லது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்…!!