ஐதராபாத் தீ விபத்து – பலி 9ஆக உயர்வு..!!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நம்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ, நான்கு தளங்களிலும் பரவியதால் 9 பேர் உயிரிழந்தனர். ரசாயன கிடங்கு, குடியிருப்பை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு வந்துவிட்டது – மோடி..!!

Read Next

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற புகழ், ஸ்ருஷ்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular