
ஐந்து பூண்டு பற்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்தவிதமான நோய்களாக இருந்தாலும் சரி அலர்ஜியாக இருந்தாலும் சரி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் மருத்துவம் செய்தனர். ஆனால் இந்த காலகட்டத்திலோ அப்படியெல்லாம் இல்லை தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு செல்லும் நிலை வந்து விட்டது. இந்நிலையில் 5 பூண்டு பற்கள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐந்து பூண்டு பற்களை எண்ணெயில் வதக்கி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சமையலில் பூண்டை அதிகமாக சேர்த்துக் கொள்வது நமக்கு ஆரோக்கியம் தரும். மூன்று பூண்டு பற்களை பாலில் காய்ச்சி இரவில் அருந்தினால் தைராய்டு கல்லீரல் சம்பந்தமான நோய்களும் குணமாகும். மற்றும் தினமும் 5 பூண்டு பற்களை சாப்பிடுவதன் மூலம் நம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.