
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை டெல்லி அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அணியின் துணை கேப்டனாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியில் கேப்டனாக இருந்து வந்த ரிஷப் பந்த், விபத்தில் சிக்கி காயமடைந்ததால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கப்போவதில்லை. தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் வார்னர் தலைமையில் 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி, ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.