ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தர்காவில் ஐயப்ப மாலையுடன் வந்து நடிகர் ராம்சரண் வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்…
ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்கா உள்ளது இந்த தர்காவில் நடைபெற்ற 80-வது தேசிய முசேரா கஜல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ராம்சரனுக்கு இந்த அழைப்பை ஏற்ற ராம்சரனும் மூன்று மாதங்கள் முன்பே வருவதாக கூறியிருந்தால் இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்பன் மாலை அணிந்து விருதம் இருக்கும் ராம்சரண் ஏ ஆர் ரகுமான் அழைப்பை ஏற்று ராம்சரண் தர்கா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், இந்த நிகழ்ச்சியில் பேசி ராம்சரண் கடப்பா தர்காவுடன் எனக்கு வலுவான தொடர்பு உள்ளது. இந்த தர்கா என்றால் எனக்கு தனி சிறப்பு எனது திரைப்படத்துறையில் மிக முக்கியமான படமும் மகதீரா ரிலீசுக்கு முந்தைய நாள் இந்த தர்காவிற்கு வந்தேன் அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது நல்ல நட்சத்திர அந்தஸ்தை எனக்கு கொண்டுவந்து சேர்த்தது, மேலும் இந்த தர்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஏ ஆர் ரகுமான் மூன்று மாதங்களுக்கு முன் அழைத்தார் நானும் வருகிறேன் என்று சொன்னேன் அவருக்கு கொடுத்த வாக்குறுதியை ஐயப்ப மாலையில் இருந்தாலும் தர்காவுக்கு வந்தேன் என்று நடிகர் ராம்சரண் கூறியுள்ளார்..!!




