
- ஐயர் வீட்டு புளிசாதம் தெரியும் இது என்ன உளுந்தோரை சாதம்..! இது தான் அந்த சாதமா..!
உளுந்தோரை சாதம் செய்முறை
என்னதான் வித்தியசமான சமையல் செய்து சாப்பிட்டாலும் கோவில் சாப்பாடுக்கு தனி ருசிதான். அதுவும் பெருமாள் கோவிலில் கொடுக்கும் சாதத்திற்கு என்றும் தனி பெரும் ருசி உள்ளது. பெரும்பாலும் அவர்கள் என்ன சேர்த்து சாதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த ரகசியத்தை இப்போது உங்களுக்கு சொல்லிக்கொடுக்க போகிறேன்.
இன்று நாம் ஐயர் வீட்டில் செய்யும் அருமையான உணவை எப்படி செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள போகிறோம். அதேபோல் கோவிலில் வித்தியாசமான நிறத்தில் அதாவது காபி தூள் நிறத்தில் இருக்கும். அது என்ன சாதம் அந்த சாதத்தின் செய்முறையை பற்றி பார்ப்போம்..!
குறிப்பு: 1 இதில் நெய், முந்திரி சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை: 1
அடுப்பை பற்றவைத்து கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 3 ஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
அடுத்து அதனுடன் மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, 1/4 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். கருக விடாமல் சிவந்த பின்பு அடுப்பை விட்டு இறக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன்பின் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளலாம்.
அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 1/4 ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் உளுந்து சேர்த்து, கடுகு பொரிந்த உடன் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் அதனுடன் 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்பு அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்க்கவும். இப்போது இது அனைத்தும் சேர்த்து மீடியம் பிலேமில் வைத்து கலந்துவிடவும்.
கடைசியாக உப்பு சேர்த்து கலந்துவிடவும். இந்த உளுந்தோரை ராகு பகவானுக்கு மிகவும் விசேஷம். ஆகவே இதனை கோவிலில் கொடுப்பார்கள். இதனை வீட்டில் மதிய உணவுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.