
ஐ.டியில் வேலை செய்பவர்களுக்கு உறுப்பு செயலிழப்பு அதிகரிப்பு?..
கர்நாடக சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மாநிலத்தில் ஒரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 8,419 பேரில் 20% க்கும் அதிகமானோர் ஐ.டி. வேலை செய்பவர்கள் என தெரியவந்துள்ளது.
அதிக மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறைகள், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன. வரும் காலங்களில் இது அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.