
குஜராத்துடனான குவாலிபையர் 1 போட்டியில் தல தோனி நடுவர்களுடன் பேசி நேரத்தை தாமதப்படுத்தியதாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தோனிக்கு அபராதமோ அல்லது இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த போட்டியில் 12வது ஓவரை பத்திரானா வீசினார். அதற்கு பின்னர் ஒன்பது நிமிடங்கள் ஓய்வு எடுத்த பிறகு 15 வது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்து நாலு நிமிடங்கள் மட்டுமே பீல்டிங் செய்தார். இதனை தொடர்ந்து பத்திரானா பந்து வீச நடுவர்கள் அனுமதிக்கவில்லை. அப்போது தோனி குறுக்கிட்டு நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இந்த போட்டியில் ஐந்து நிமிடம் தாமதம் ஏற்பட்டது.