
வாழ்க்கை என்னும் வேகமாக பயணிக்கும் சூழலில் எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க வேண்டியதை யாராலும் தவிர்க்க முடியாது. ஒருவருடைய எதிர்பார்ப்பு அதற்கு ஏற்ப தயாரிப்பு நேர்மறை சிந்தனை இவை எல்லாம் மகிழ்ச்சி தரும் முடிவை அளிக்கும் என்று எண்ணுவதில் தவறில்லை அப்படி எண்ணுவது தான் உசிதம்..
ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் முறையில் பிறரை மற்றும் மற்றவைகளை சார்ந்து இருப்பது அத்தியாவசியம் மட்டுமல்லாது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது சந்திக்கும் பழகும் நேரும் அடுத்த நபர்களின் என்ன ஓட்டங்கள் எதிர்பார்ப்புகள் கட்டாயம் நம்முடன் ஒத்துப் போகும் என்று திட்டவட்டமாக கூற முடியாது..
அதேசமயம் அப்படிப்பட்ட நபர்களை சந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருந்தால் என்ன மாதிரி ரிசல்ட் வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பது என்பது சுலபமில்லை. பல சந்திப்புகள் பேச்சு வார்த்தைகள் உரையாடல்கள் கலந்து ஆலோசனைகள் ஆகியவற்றிற்கு பிறகும் ஏதோ ஒரு காரணத்தினால் முடிவு நமக்கு சாதகமாகாமல் கை நழுவி போவதை பல அனுபவித்துள்ளனர் அனுபவித்தும் வருகின்றனர்.இங்கு மனிதர்களின் பங்களிப்பை தவிர முதலில் குறிப்பிட்ட மற்றவைகள் சாதகமான முடிவு வராததற்கு காரணமாக அமையலாம். உதாரணமாக தாங்கள் எல்லா வகையிலும் தயார் செய்து கொண்டு முன்னதாகவே கிளம்பி மீட்டிங் நடக்க வேண்டிய இடத்திற்கு செல்ல முற்படும்பொழுது போகும் வழியில் டிராபிக் ஜாம் ரயில் விமானம் தாமதமாக புறப்படுதல் போகும் கார் வழியில் மேஜர் ரிப்பேர் போன்ற தடங்களால் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே இத்தகைய எதிர்பாராத ஏமாற்றங்கள் தடங்கல்கள் அவைகளில் மூலம் ஏற்படும் நஷ்டங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு ஒதுக்க நடைமுறை வாழ்க்கையில் பழகிக் கொள்வது அவசியம்..
போட்டி பொறாமை நிறைந்த மற்றும் முன்னேற துடிப்பவர்கள் நிறைந்த சூழ்நிலையில் சில குறிப்பிட்ட நபருடன் அதிகம் பழகாமல் இருப்பது குறைவாகவும் தேவைக்கேற்ப விவாதிப்பதும் உங்களுக்கு நன்மை பயக்கும் அப்படிப்பட்ட நபரிடம் இருந்து தள்ளி ஒதுங்கி இருப்பது சால சிறந்தது. தவிர்க்க முடியவில்லை என்றால் புன்சிரிப்பை உதிர்த்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்வது உங்களுக்கு கட்டாயம் நன்மை பயக்கும்..
சூழ்நிலை தேவைக்கேற்ப ஒதுக்கவும் ஒதுங்கவும் பழகுவதால் தனாவசியமான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அதிகமான நேரம் விரயம் ஆவதை தவிர்க்கலாம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு மன திருப்தியும் அடையலாம்..!!