ஒத்த கறிவேப்பிலையில், இத்தனை நன்மைகளா.!! முழு விபரம் உள்ளே..!!

நமது இந்திய உணவு வகைகளில் இடம்பெறும் முக்கிய பொருள்களில் ஒன்றுதான் கருவேப்பிலை. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. மாறாக முதலில் அதை எடுத்து ஊறவைத்துவிட்டு தான் நாம் சாப்பிடவே தொடங்குவோம்.

கருவேப்பிலையின் நன்மைகள் பற்றி பலரும் தெரிந்ததுதான். ஆனாலும் எடை மற்றும் சர்க்கரை அளவை குறைப்பதற்கும், தலைமுடி வேகமாக வளர்வதற்கும் கருவேப்பிலையை எப்படி பயன்படுத்தினால் பயன் தரும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

கருவேப்பிலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரக்கூடிய ஒரு பொருளாக கருவேப்பிலை விளக்குகிறது. இந்த கருவேப்பிலையில் விட்டமின் ஏ ,விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் ஈ, பைபர், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு கோ இன்சத்து, மெக்னீசியம், தாமிரம், அமினோ அமிலம் கிளைகோசைடுகள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற கருவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்களாகும்.

இயற்கையாகவே தலைமுடி பிரச்சனைக்கு கருவேப்பிலை முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் இது சர்க்கரை நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாக பயன்படுகிறது. கருவேப்பிலையை மென்று சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

உடல் எடை குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கருவேப்பிலையை எடுத்துக் கொண்டால் நல்ல பயனை அளிக்கின்றது. இந்த இலை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுகிறது. சக்தியை அதிகப்படுத்துகிறது. இருதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் இந்த இலையை சாப்பிட்டு வர வேண்டும் .இதன் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் ஜீரண சக்தி அதிகரிக்கிறது.

கருவேப்பிலையை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும் சிறிதளவு மிளகுத்தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு சாதத்தில் இந்த பொடியை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து தினமும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகின்றது.

கர்ப்பிணிகளுக்கு கருவேப்பிலை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம் .கருவேப்பிலையை முதல் நாள் இரவு ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை எடுத்து இதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி குடித்து வந்தால் தலைமுடி காடு போல கருகருவென வளரும், இளநரை நெருங்காது.

கருவேப்பிலையை வெறும் வயிற்றில் 15 முதல் 20 சாப்பிட்டால் வயிறு சுத்தமடையும், அஜீரண கோளாறுகள் நீங்கி தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Read Previous

தண்டுக் கீரையின் தனித்துவ நற்பண்புகள்.!! சிறுநீரகம், கல்லீரலுக்கு நல்லது.!!

Read Next

கண் புருவத்தை அழகாக்கும் சூப்பர் சீரம்..!!எப்படி பயன்படுத்துவது.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular