
தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது குரல் பீடம் விருது இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்…
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழ் ஆய்வு மதிய நிறுவனத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை அன்னை தமிழுக்கு அறிஞர்கள் சேவை செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த விருதுகள் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டாக வழங்கப்படவில்லை தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமும் தமிழ் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையும் ஆகும் செம்மொழியாக பல்வேறு மொழிகள் அறிவிக்கப்பட்டிருக்கும்போதிலும் தமிழுக்கு மட்டும்தான் தன்னாட்சி அதிகரித்துடன் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது அந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்திய தமிழருக்கு தொல்காப்பிய விருது தலா ஒரு இந்திய ஒரு வெளிநாட்டு அறிஞர் என இருவருக்கு குறள் பீடம் விருதுகள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்ட இந்திய இளம் வீரர்கள் ஐந்து பேருக்கு இளம் அறிஞர் விருது என மொத்தம் எட்டு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, 2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தொல்காப்பியர் விருதுகள் பிற விருதுகளில் பெரும்பான்மையும் வழங்கப்பட்ட நிலையில் அதன் பின் கடந்த 9 ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படவில்லை என்பதை குறித்து மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..!!