
ஐரோப்பிய கமிஷன் மது பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டிருக்கிறது. இதன் படி ஒய்ன் அருந்தும் பழக்கம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த சரிவானது இத்தாலியில் 7 சதவீதமும் ஸ்பெயினில் 10 சதவீதமும் பிரான்சில் 15 சதவீதமும் குறைந்துள்ளது. அதே சமயம் உலகின் மிகப்பெரிய ஒயின் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 சதவீதம் வரை ஒயின் உற்பத்தி உயர்ந்துள்ளது. சில வருடங்களாகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்கள் வாங்கும் சக்தி பொருளாதார காரணத்தினால் மிகவும் குறைந்துள்ளது.
பெரும்பாலாான மக்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பீர், மதுபானங்கள் அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் ஒயின் வியாபாரம் குறைந்து விட்டது. இந்த நிலையில் அதிகபட்சமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஒயின் மதுபானத்தை அழிக்கவும் ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் பிரான்ஸ் அரசாங்கம் சுமார் 1782 கோடி செலவு செய்துள்ளது.
இதனை குறித்து பிரான்ஸ் அரசு கூறியிருப்பதாவது, அதிக ஒயின் பானங்கள் கைகளை சுத்தம் செய்ய சுத்திகரிப்பு பொருட்கள், நறுமண பொருட்கள் ஆகியவற்றில் பயன்படும் ஆல்கஹால் வகைகள் அரசாங்கம் வாங்கி கொள்வதற்கும் மாற்று விவசாய உற்பத்தியில் ஒயின் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
இதனை குறித்து அந்த நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் மார்க் கூறியிருப்பதாவது, மது உற்பத்தியாளர்கள் அரசு உதவி செய்தாலும் தாங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட்டு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தயாரிப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.