
ஸ்ரீபெரும்புதுார் – -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் – -வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில் ஒரகடம் அமைந்துள்ளது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன.
ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்கு பணியாற்ற ஏராளமானோர் ஒரகடம் வருகின்றனர். ஒரகடத்தில் அரசு பேருந்து பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு பயணியர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில், ஒரகடம் பகுதியில் கழிப்பறை வசதி இல்லை.
இதனால், திறந்தவெளியில் மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.
ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள், சி. எஸ். ஆர். , எனும் தொழிற்சாலைகள் சமூக பொறுப்பு நிதியில், ஒரகடம் மேம்பாலம் கீழ் கழிப்பறை அமைத்து கொடுக்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்