ஒரிசா பாலு மறைவு – முதலமைச்சர் இரங்கல்..!!

ஒரிசா பாலு என அறியப்படும் தமிழ் ஆய்வாளரும், எழுத்தாளருமான சிவ பாலசுப்பிரமணி (வயது 60) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு (எ) சிவ பாலசுப்பிரமணி மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளைக் கடல்வழியே தேடிக் கண்டு வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர் ஆவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read Previous

துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ..!!

Read Next

சென்னையில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular