“ஒருத்தர் கூட காப்பாற்ற வரல! தண்ணி கூட இல்ல..!!” கீர்த்தி பாண்டியனின் கண் கலங்கிய பதிவு..!!

கடந்த இரண்டு நாட்களாகவே மிட் ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது என்றே கூறலாம். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை பட்டுள்ளது.

பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்களும் இந்த புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டனர். செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டு இருப்பதால் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் வடிந்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளது .

மேலும் மும்பையில் இருந்து தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த அமீர்கானும் இதில் மாட்டிக் கொண்டார். இவரை மீட்பு குழுவினர் பத்திரமாய் மீட்டனர், இந்நிலையில் மயிலாப்பூரில் வசிக்கும் நடிகர் அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

”மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரியில் இருக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் 48 மணி நேரமாக மின்சாரம் இல்லை தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் நிரம்பியுள்ளது பால்குட கிடைக்கவில்லை, யாரும் வெளியே போகவும் வழியில்லை யாரும் காப்பாற்ற கூட வரவில்லை” என்று அப்பதிவில் கூறியுள்ளார்.

Read Previous

“ரஜினியின் கையில் அழகாக இருக்கும் இந்தக் குட்டிப் பையன் யார் தெரியுமா..?”

Read Next

லாரி – மினி வேன் மோதி பயங்கர விபத்து..!! 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular