ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்..!! படித்ததில் பிடித்தது..!!

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.
அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். “நான் இங்கே அமரலாமா?”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்….

பின் உறக்கக் கேட்டாள் “இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது.
அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னால்

“நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்ககச் சொன்னான்.

என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்” இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான் “நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…!

நீதி :
ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.

Read Previous

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எதற்கும் பஞ்சமே இல்லாமல் அல்டிமேட் ஆக அசத்தும் ரெசிபி இதோ..!!

Read Next

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்..!! இனி எடை குறைவு பிரச்சனை இருக்காது.. வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular