
Oplus_131072
ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும் தெரியுமா..??
ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. தெரியாதவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து முதல் பத்து வயது உடைய குழந்தைகள் தினமும் இரண்டு அல்லது நான்கு பாதம் பருப்புகளை சாப்பிட்டாலே போதும்.
பதினெட்டில் இருந்து 20 வயதுக்கு ஏற்ப வயது உடையவர்கள் ஆறு அல்லது எட்டு பாதாம் சாப்பிட வேண்டும். குறிப்பாக பெண்கள் தினமும் 12 பாதம் சாப்பிடுவது அவசியமான ஒன்று. பாதாம் பருப்பில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்றாலும். அதை அளவாக எடுத்துக் கொள்வதுதான் நம் உடலுக்கு நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு எதை சாப்பிட்டாலும் அதை அளவாக சாப்பிட்டால்தான் நம் உடலுக்கு நல்லது.
இந்நிலையில் இந்த பாதாம் பருப்பில் நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது கொழுப்பு அமிலங்கள் மூளைக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கிறது பாதாம் பருப்பை உட்கொள்வது சருமத்திற்கும் மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இது சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தருகிறது. சரியான வயதில் சரியான அளவில் பாதாமை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.