
மத்தியப் பிரதேசத்தில் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ரைசென் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.160ஆக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மற்ற பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரைசென் மாவட்டத்தில் உள்ள பாரி பகுதியில் தக்காளி அதிகளவில் விளைகிறது. ஆனால் அங்கிருந்து நேபாளம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.