
நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அன்றாட தேவைகளில் ஒன்று தான் தண்ணீர். இப்படிப்பட்ட தண்ணீரை ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் அருந்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்த நவீன உலகத்தில் அனைவரும் உடலுக்கு போதுமான அளவு தண்ணீரை அருந்தாமல் உடல் சூடு மற்றும் இதனால் வரும் பிரச்சனைகள் போன்றவற்றை தினமும் சந்திக்கிறார்கள். மனிதன் என்பவன் உணவு உண்ணாமல் கூட இருந்து விடுவான் ஆனால் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்காமல் ஒருநாளும் உயிர் வாழ முடியாது. நமது உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் நீர் என்றது ஒரு முக்கியமான காரணியாகும். குறிப்பாக குழந்தைகள் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் தண்ணீரை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு மலச்சிக்கல், மற்றும் உடலில் வெப்பம் ரீதியான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் தண்ணீரை குடிக்க மறுத்தால் அவர்களுடைய பெற்றோர்கள் தான் அடிக்கடி தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும். மேலும் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் குறிப்பாக தசைகள் 70 சதவீதமும் மூளை 90 சதவீதம் ரத்தம் 83 சதவீதம் இந்த தண்ணீரால் தான் உருவாகியுள்ளது. இப்போவாவது தெரிந்து கொள்ளுங்கள் தண்ணீரை குடிப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று. இந்நிலையில் சராசரியாக மனிதன் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீராவது கட்டாயமாக அருந்த வேண்டும் என்று கூறுகிறார்கள். கோடைக்காலம் வரும்பொழுது கண்டிப்பாக நாளும் முதல் ஐந்து லிட்டர் நீரே அருந்துவதன் மூலம் நம் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம். மேலும் ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு நாலு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். நாலு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு ஆறு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். ஒன்பது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். 11 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கட்டாயமாக அருந்த வேண்டும்.