செல்லப்பா அந்த பள்ளி வளாகத்தினுள் அன்றைக்கு தான் முதன்முறையாக நுழைகிறான் வாசல் கேட்டை தாண்டியதுமே பூஞ்சோலைக்குள் புகுந்தார் போல் ஒரு குளிர்ச்சி ! அவன் மனைவி ரமாவின் வகுப்பு தோழி டீச்சராக அந்த பள்ளியில் இருந்ததாலேயே அவர்கள் பையனுக்கு அங்கு மூன்றாம் வகுப்பில் அட்மிஷன் கிடைத்தது..
செல்லப்பா வாழ்க்கையில் எல்லாமே லேட்தான். 22 வயதில் கிடைத்த அரசு பணி 32 வயதில்தான் பர்னமனண்ட் ஆனது. ஒரே பையனை ஒழுங்கான பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டும் என்ற ரமாவின் பிடிவாதத்தால் தான் அவன் ஒத்துக்கொண்டான்..
இன்னமும் அவன் பயம் தெரியவில்லை நிறைய செலவாகுமே எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று ரமா சொன்னாலும் எப்படி எப்படி என்று இப்பொழுதும் அவன் உள் மனம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. செல்லப்பாவுக்கு அவன் பெயரின் மீது பெரும் வெறுப்பு ஒன்றாம் வகுப்பு ஆசிரியரிலிருந்து பிஏ படித்த போது இருந்த ஆசிரியர் வரை சொல்லி வைத்தார் போல் அவர் மீது ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து செல் அப்பா வகுப்பை விட்டு என்று சொல்லும் போதெல்லாம் மனசுக்குள் புலுங்கி பெயர் வைத்த அந்த அப்பாவை திட்டுவான் பெயரை மாற்றிக் கொள்ளவும் உள்ளூர பயம் மாற்றிக் கொண்டாலும் அதையே காரணம் காட்டி நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று கையில் பையனின் உணவுப்பை லேசாக கனத்தாலும் மனதில் செலவு பயத்தையும் மீறி ஒரு கர்வம் குடி கொண்டிருப்பதை நன்றாகவே உணர்ந்தான். என் பையன் எவ்வளவு மதிப்பான பள்ளியில் இன்று ஆனந்தப்பட்டது உள் மனது. பெஞ்சில் அமர்ந்த அவன் பையில் சக பயன்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டதும் மறைவாக நின்று கொண்டு அவன் பேசுவதை தொடர்ந்து கேட்டான். ஆமாண்டா எங்க அப்பா அம்மாவுக்கு நான் செல்லம் தாண்டா எங்க தாத்தா இதை எப்படியோ முன்னாலே தெரிஞ்சுகிட்டேன் எங்க அப்பாவுக்கு செல்ல அப்பா அதாவது செல்லப்பான்னு பேர் வச்சிருக்காங்க. அப்போ எங்க தாத்தா எவ்வளவு பெரிய புத்திசாலி என்றான் பையன். செல்லப்பாவுக்கு பொறியியல் அடித்தார் போல் இருந்தது அப்பாவின் மீது அவர் வைத்த பெயரின் மீது திடீரென ஒரு மரியாதை தோன்றியது அவன் கண்கள் பணித்த அப்பாவை மானசீகமாக பாராட்டினான்..
தலைமுறை சந்ததிகள் நமக்கு காரணம் இன்றி பெயர் மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் இருப்பதில்லை அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாலும் ஒரு அடையாளம் உண்டு அந்த அடையாளங்களை நாம் தெளிவாக கண்டு அவர்களுக்கு மரியாதையும் மதிப்பும் சேரும் விதமாக நாம் நடக்க வேண்டும் அப்படி நடக்கும் பட்சத்தில் நமது மரியாதை கூடும். நமது பெற்றோர்களின் மரியாதையும் கூடும்..!!