
நிஜமான ஈர்ப்பு இருக்கும் இடத்தில் கவன ஈர்ப்பு அவசியமற்றது..
காதல் என்பது நீங்கள் சண்டையிட்டு ஜெயிப்பது அல்லது பேச்சு வார்த்தை நடத்தி சம்மதிக்க வைப்பதும் அல்ல நீங்கள் அதை நடக்க வற்புறுத்த வேண்டாம் அது இயற்கையின் சுதந்திரம் அதன் விருப்பத்தில் சரியான நேரத்தில் சரியான நபருடன் நிகழும். அவள் உங்களை நேசித்தால் அவளுடைய கவனத்தைக் கவர நீங்கள் போராட வேண்டிய நிலைக்கு அவள் உங்களை வைக்க மாட்டாள். தன் மதிப்பை அறிந்த ஒரு ஆண் ஒரு பெண்ணை தன்னை விட்டு செல்வதை தடுக்க மாட்டான். தன் மதிப்பை அறிந்த ஆண் ஒரு பெண்ணை இழக்க பயப்படுவதில்லை. ஒரு பெண் அவனை பயமுறுத்த வேறொரு ஆணுடன் செல்வதாக அச்சுறுத்தினால் உண்மையிலேயே அவனை அவள் இழப்பால். தன் காதலித்த பெண்ணை போக விடுவதால் வரும் வலிகளை அவன் உணர்கிறானா ஆமாம் உணர்கிறான் ஆனால் அவன் எதார்த்தமானவன் எனவே நீண்ட காலத்திற்கு நிம்மதியாக இருக்கும் ஒரு முடிவை எப்படி எடுப்பது என்பது அவனுக்கு தெரியும். தொலைபேசியில் உங்கள் பெண் வேறு ஆணுடன் பழகி வந்தாலோ அல்லது ஆணின் படத்தை அதிகமாக வைத்திருந்தால் அவள் போகட்டும் விட்டு விடுங்கள் கெஞ்சாதீர்கள். அவள் வேறொரு மனிதனை தன் வாழ்க்கையில் வெறும் பெஸ்டி தான் என்ற பெயரில் வைத்திருந்தால் அவள் போகட்டும் விட்டு விடுங்கள் கெஞ்சாதீர்கள் உன்னை காதலிக்க எந்த பெண்ணிடமும் ஒருபோதும் கெஞ்சாதே உன்னிடம் இருக்க விரும்பாத பெண்ணிடம் ஒருபோதும் கெஞ்சாதே..!!