ஒரு பெண் நினைத்தால் குடிசையும் கோபுரம் ஆகும்..கோபுரமும் குடிசையாகும்.. என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்..!!

மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!

அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!..

நீ கவலைப்படாதே!

இந்த வரனை ஒப்புக்கோ! உன் வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார் அப்பா!..

நான் அப்பா பேச்சை என்றுமே மறுத்து பேசியதில்லை என்பதால் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் மௌனமாக சம்மதித்தேன்…

கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டில் நுழைந்ததுமே திகைத்துப்போய்விட்டேன்..

சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாமனார், நரம்பு தளர்ச்சியால் கை கால் பாதித்த மாமியார்,மூளை வளர்ச்சி குறைந்த 25 வயது நாத்தனார்!..

கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று!.

பாழுங்கிணற்றில் வந்து விழுந்து விட்டேனே என்று மனசுக்குள் கதறினேன்!..

ஏனோதானோனு வீட்டு வேலைகள் செய்யறது, யார் எதை கேட்டாலும் எரிந்து விழறதுனு என்னை நானே ஒரு பழி வாங்குபவளாக மாற்றிக்கொண்டேன்!..

என் இவ்வளவு நடவடிக்கைகளுக்கு பிறகும் அந்த குடும்பம் என்னை தாங்கத்தான் செய்தது.

என் கணவர் என்மேல் வைத்த அன்பில் ஒரு குறையுமில்லை!..

நான் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் என்னை அன்போடு அரவணைத்து சென்றார் மாமியார்!..

புகுந்த வீட்டில் ஆறு மாசம், பொறந்த வீட்டில் ஆறுமாசம்னு என் வாழ்க்கை போயிட்டிருந்தது!…

ஒருநாள் என் வீட்டுக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பும் போது

என் மாமியார் “நீ உன் அம்மா வீட்டில எவ்வளவு நாள் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறியோ அவ்வளவு நாள் சந்தோஷமா இருந்திட்டு வா!

ஆனா! உன் வருகைக்காக இங்கே ஒரு குடும்பம் காத்திட்டிருக்கும் என்கிறதை எப்போதும் மறந்து விடாதே!”

அப்படின்னு சொன்னதுதான் தாமதம்

முன்னோக்கி நகர்ந்த என் கால்கள் சடாரென்று பின்னோக்கி நகர்ந்தது!

கைகள் பெட்டி படுக்கையை பட்டென்று கீழே உதறின!..

ஏதென்று புரியாமல் பார்த்த என் மாமியாரை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கதறினேன்!..

என் தலையை வருடி முன் நெற்றியில்

ஆதரவாய் முத்தமிட்டார் என் மாமியார்!..

எப்பேர்பட்ட குடும்பத்தை என் நடவடிக்கைகளால் கொத்தி குதறிபுட்டேன்!.

இதற்கு பரிகாரமாக நான் என்ன செய்வேன்! ஆண்டவனே என்னை மன்னித்து விடு!..

இப்போது என் பார்வையில் மாமியார் அம்மாவாக தெரிந்தார்

மாமனார் அப்பாவாக தெரிந்தார்

நாத்தனார் உடன்பிறப்பாக தெரிந்தாள்..

ஒரு நிமிடம்கூட என்னிடம் கடிந்திடாத என் கணவர் தெய்வமாக தெரிந்தார்!

இப்போது என் புகுந்த வீடு ஒரு கோயிலாக தெரிந்தது!…

ஒரு பெண் நினைத்தால்
குடிசையும் கோபுரம் ஆகும்
கோபுரமும் குடிசையாகும்..

எல்லாம் அவள் கையில் தான் இருக்கிறது……

Read Previous

ஒரு நாள் நாம் இருக்க மாட்டோம் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களது அன்பை காட்ட சில உயிர்கள் இவ்வுலகில் உண்டு..!!

Read Next

காலை நேர நடை பயிற்சியின் போது நமது உடலில் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular