
ஒரு மாதம் உருளைக்கிழங்கு சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்னு தெரியுமா..??
உருளைக்கிழங்கு என்பது நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த வகையில் அனைவருக்கும் பிடித்த இந்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஒரு மாதம் உருளைக்கிழங்கு சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகிறது. உருளைக்கிழங்கை ஒரு மாதம் தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உங்கள் உணவில் உருளைக்கிழங்கை சேர்க்கவில்லை என்றால் செரிமானத்தை மேம்படுத்த முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவை கூட ஏற்படலாம். எனவே உருளைக்கிழங்கை சாப்பிடுவதற்கு முன் இதை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.