அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் அரசு ஊழியர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும் எனவே அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்..
தமிழக அரசின் திட்டங்கள் தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இந்த திட்டங்களை உரிய முறையில் மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, அந்த வகையில் அரசுக்கு மக்களுக்கும் பாலமாக அரசு ஊழியர்கள் உள்ளார்கள் அரசு சார்பாக எந்த திட்டங்கள் அறிவித்தாலும் அது அடித்தட்டு மக்களை சென்று சேர்வது அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது அந்த வகையில் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து திட்டங்களை சேர்க்க வேண்டும், மேலும் திட்டங்கள் பற்றி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் அதனை சரி செய்ய வேண்டிய கடமை அரசு ஊழியர்களுக்கு உண்டு அரசு ஊழியர்கள் பொது மக்களின் கோரிக்கைகளை சரிவர செய்யவில்லை என்றால் அரசுக்கு தான் கெட்ட பெயர் உருவாகும், இந்த நிலையில் அரசர் ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் சார்பாக ஆயிரக்கணக்கான புகார் மனு அளிக்கப்படுகின்றன, இதில் பலரின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது, மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள சாத்தியமில்லை என கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாதம் காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்படலாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார் அனைத்து அரசு செயலாளர்களும் துறை தலைவர்களும் இல்லையென்றால் அரசு ஊழியர்களுக்கு அதிரடி பணி மாற்றம் அல்லது பணியிடை நீக்கம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்..!!