
இட்லி தோசை முதல் பூரி சப்பாத்தி வரை அனைத்துக்கும் காமினேஷன் ஆக இருக்கும் அட்டகாசமான உருளைக்கிழங்கு குருமா எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
கருவேப்பிலை கொத்தமல்லி – தேவையான அளவு
தேங்காய் – ஒரு கைப்பிடி
ஆயில் – இரண்டு ஸ்பூன்
சோம்பு - ரெண்டு ஸ்பூன்
கசகசா – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
வர மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடான பிறகு அதில் இரண்டு ஸ்பூன் ஆயில் ஊற்றவும். ஆயில் சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக புரிந்த பிறகு கட் பண்ணி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கி கோல்டன் பிரவுன் கலருக்கு வந்த பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதங்கிய பிறகு நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்றாக வதங்கிய பிறகு சிறிதளவு மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் வர மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், 1 ஸ்பூன் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த உருளைக்கிழங்கை சின்ன சின்னதாக கட் பண்ணி இதில் சேர்க்கவும். அடுத்து ஒரு கைப்பிடி தேங்காய் உடன் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் சிறிதளவு கசகசா சேர்த்து நன்றாக அரைத்து இதில் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து போதித்த பிறகு இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதை செய்வதற்கு பத்து நிமிடமே போதும். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த குருமாவை மறக்காமல் ட்ரை பண்ணுங்கள்.