ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை..! மக்கள் செல்வனின் மனம் பார்த்து பாராட்டிய இயக்குனர்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் தற்போது பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு நிகழ்ந்த போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்து படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பல நேர்காணல்களில் தொடர்ந்து, பல தகவல்களை அளித்துக் கொண்டு வருகிறார்.

இந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் மாவீரன் திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பது குறித்து இயக்குனர் மாடோன் அஸ்வின் கூறி இருப்பதாவது, மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு கதை சொல்லும் பாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக ஒரு ரூபாய் பணம் கூட அவர் வாங்கவில்லை. சினிமா துறையில் இவ்வகையான சம்பவங்கள் வித்தியாசமான போக்கை குறிக்கிறது .

இந்த மாறி சம்பவம் நடப்பது எனக்கு இதுவே முதல் முறை. ஏன்? பணம் வாங்க வில்லை என்று கேட்ட போது, இதற்கு பணம் வாங்குவது சரியாக இருக்காது. மேலும் என் நண்பன் சிவகார்த்திகேயனுக்காக இதை செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்ததாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read Previous

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் கதை வெளியீடு..!இணையத்தில் வைரல்..!!

Read Next

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு..!Assitant Manager பணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular