
ஒரு வாரத்தில் எத்தனை முறை அசைவம் சாப்பிட வேண்டும் என்றும் எந்த அளவிற்கு அசைவம் சாப்பிடலாம் என்றும் மருத்துவர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார் மேலும் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்…
அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வாரத்தில் எத்தனை முறை அவற்றை சாப்பிடலாம் என்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் சந்தேகம் இருக்கும் இதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண்குமார் தெரிவித்துள்ளார்..
நம் உடலுக்கு தேவைப்படும் சத்துக்களில் பிரதானமாக இருப்பது புரதம் இந்த புரதச்சத்து அசைவ உணவுகளில் அதிகமாக இருக்கிறது அந்த வகையில் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் அளவிற்கு புரதம் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் உதாரணமாக 60 கிலோ உடல் எடை கொண்டவர்களுக்கு குறைந்தபட்சம் 48 கிராம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புரதத்தில் ஒன்பது வகையான அமினோ ஆசிட் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் இவை அனைத்தும் அசைவ உணவுகளான முட்டை இறைச்சி உணவுகள் மீன் வகைகள் மற்றும் பால் பொருட்கள் இருந்து எளிதாக கிடைத்து விடுகின்றன ஆனால் தானியங்கள் மற்றும் பயிர் வகைகள் சாப்பிடுபவர்களுக்கு இவை அனைத்தும் ஒரே உணவில் இருந்து கிடைப்பதில்லை எனவே மருத்துவர் அருண்குமார் குறிப்பிட்டார்.இவர்களுக்கு தேவையான புரதம் 3 பங்கு தானியங்களிலிருந்து ஒரு பங்கு பயிர் வகைகளில் இருந்து கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார் இது தவிர அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வாரத்தில் 700 முதல் 900 கிராம் வரை அவற்றை சாப்பிடலாம் என மருத்துவர் அருண்குமார் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஒரு நாளைக்கு 300 கிராம் சாப்பிட்டால் வாரத்திற்கு மூன்று முறை அசைவம் சாப்பிடலாம் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 150 கிராம் அளவில் சாப்பிடுபவர்களாக இருந்தால் தினசரி கூட அசைவம் சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்..!!