உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்…
-அன்பு.
அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்..
-பகிர்ந்துண்ணல்.
ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.
-மூடநம்பிக்கை.
இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே…”
-உரிமை
எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க… “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்”.
-திமிர்
கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி’ என்றார்.
-மதம்
வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க சாப்பிடப்போற முதல் பலாச்சுளை இதுதான்” என்றாள்.
-ஏழ்மை
நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா கொடுக்கணும்” என்றான்.
-நட்பு.
துணைவியாருக்கு ஒரு துண்டு..
-கடமை .
என்னால் ஒரு சுளைகூட சாப்பிடமுடியவில்லை
– நோய்.
ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது….




