
ஒரே ஒரு வார்த்தை அது உங்கள் வாழ்க்கையே மாற்றும் வல்லமை படைத்தது வாழ்க்கையையே மாற்றக்கூடிய அந்த வார்த்தை என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது நன்றி இது தான் அந்த வார்த்தை. இதைப்பற்றி இந்த பதிவில் நாம் சற்று பார்க்கலாம்..
நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கு உதவுபவர்கள் பலர் உள்ளனர். பிறர் உதவி இன்றி நம்மால் வாழ முடியாது என்பதை விமர்சனம் ஒரு புதிய ஊருக்கு செல்கிறோம். அங்கு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வழியில் தென்படும் யாரிடமாவது வழி கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நாம் அவரிடத்தில் வழி கேட்டால் நமக்கு சரியான வழியை காட்டி உதவுவார். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள் அவருக்கும் மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சி. நம்மில் பலர் பல சமயங்களில் பிறரிடம் உதவியை பெற்றுக்கொண்டு காரியம் முடிந்ததும் உதவி செய்தவரை கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர் இது மிகவும் தவறான செயலாகும். நமக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்து பிறகு அவரை எங்கே பார்த்தாலும் சிநேகமாக ஒரு புன்னகை செய்து விட்டு செல்லுங்கள். நாம் எப்போதும் அந்த துறவியைப் போல அனைவருக்கும் உதவ வேண்டும் பிறருக்கு உதவுவது என்பது ஒரு வரம் எதையும் எதிர்பார்க்காமல் உதவும் குணம் சிலருக்கு உள்ளது. அப்படி நமக்கு உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். உதவுவது உதவி செய்பவர்களை மறக்காமல் இருப்பதும் வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒரு பண்பாகும். நீங்கள் நெரிசல் மிகுந்த சாலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களுக்கு பாதையை கடக்க பயமாக இருந்தால் உங்களுக்கு யாராவது பாதையை பத்திரமாக கடக்க உதவலாம். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள் வழியில் நின்று கொண்டிருக்கும் போது யாராவது உங்களுக்கு லிப்ட் கொடுத்து உதவலாம் அவருக்கு நன்றி சொல்லுங்கள். ஆட்டோவில் பயணித்து நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிடலாம் அந்த நேரம் ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு விளைவது நம் நம்ம நன்மை மட்டுமே என்பதை உணருங்கள். உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்வதன் மூலம் அவர்களின் மனதில் உங்களைப் பற்றிய உயர்வான ஒரு அபிப்ராயம் ஏற்படும். இது உங்கள் உயர்வுக்கு நிச்சயம் வழி வகுக்கும் இந்த கட்டுரையை பொறுமையாக வாசித்த உங்களுக்கும் என் நன்றி..!!