சென்னை பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவி பியூலாவை தொடர்ந்து மனமுடைந்த சகாயம் செபாஸ்டின், விஷம் கலந்த கேக்கை குடும்பத்தினருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷம் உட்கொண்ட 4 பேரில் 2 பேர் உயிரிழந்தனர்; மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




