ஒரே நாளில் பிடிபட்ட ரூ.8 கோடி மதிப்பிலான மீன்கள்..!! மீனவர்கள் உற்சாகம்..!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். தமிழக கடல்களில் இந்த இரண்டு மாத காலங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தலைகாலமானது ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு கன்னியாகுமரி உட்பட்ட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது, இதனை தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி இரவு 12 மணியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்ததினை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து 570 படகுகளில் சுமார் 4000 மேற்பட்ட மீனவர்கள் மிகவும் உற்சாகத்துடன் மீன்களை பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் கடலில் இருந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் இறால், நண்டு, கனவாய் உள்ளிட்ட மிக விலை உயர்ந்த மீன்களுடன் மிக உற்சாகமாய் காரை திரும்பியுள்ளனர். மேலும் இந்த மீன்கள் 200 கிலோ முதல் 450 கிலோ வரை படகுகளில் அளவை பொறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் மொத்தம் எட்டு கோடி ரூபாய் அளவிலான மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் கூறினார். இதனால் மீனவர்கள் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்தார். மேலும் இந்த மீன்களை வாங்கி செல்ல வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் கடற்கரையில் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நீட் தேர்வு மோசடி விவகாரம்..!! குஜராத் விவகாரத்தை கையில் எடுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்..!!

Read Next

சேலத்தில் நடமாடிய சிறுத்தை திருப்பத்தூரில் பிடிபட்டதா..? வனத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular