தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது அந்த வகையில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது…
மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து பல லட்சம் மாணவர்கள் இளைஞர்கள் வேலை தேடி பல இடங்களுக்கு செல்கின்றனர் அந்த வகையில் அரசு பணியில் இணைய வேண்டும் என ஆர்வம் உள்ள இளைஞர்கள் அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்து வருகின்றனர் அதன்படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் அனைவருக்கும் தமிழக அரசு பணியில் வேலை வழங்க முடியாத சொல்லில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி வருகின்றனர் அந்த நிறுவனத்தை பணிபுரிய பல ஆயிரம் இளைஞர்கள் தேவைப்படும் சூழல் உள்ளது இதன் கருத்தில் கொண்டு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி வேலூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலூர் மாவட்டத்தில் 30 11 24 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3 மணி வரை திருவள்ளூர் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி தரணம்பேட்டை குடியாத்தம் வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது..!!