ஒரே நாளில் 179 வழக்குகள்..!! திருவாரூரில் தீவிரமடையும் கஞ்சா குட்கா விற்பனை..!!

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா, குட்கா, சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பாக 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது “திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சோதனையில் நேற்று மட்டும் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 9 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் ஏழு பேர் மீது குண்டார் தடுப்பு சட்டம் பயந்து உள்ளது. அதில் ஒருவர் கஞ்சா விற்பனையாளர். கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டார் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்”, என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Read Previous

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள்..!! மேலும் தகவல் உள்ளே..!!

Read Next

ஜாதகத்தில் தோஷமா..? இதை மட்டும் செய்யுங்கள் உடனே நீங்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular