
ஒரே நேரத்தில் பலவகையான ஆரோக்கிய சிறுகுறிப்புகளை காண்போம்..
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் கிடைக்கின்றன, வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் கொய்யாப்பழத்திற்கு உண்டு, அதேபோல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பசியை தூண்டுவதற்கு ஓமம் உதவுகிறது, நெஞ்சு சளி வறட்டு இருமல் இருப்பவர்களுக்கு ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது வயிற்றுப் பகுதியில் புண் இருப்பவர்கள் கண்டிப்பாக ஓமம் கசாயத்தை குடித்து வந்தால் வயிற்றுப்புண் சரியாகும், செரிமான சக்தியை தூண்டுவதில் ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது, மேலும் சுண்டைக்காய் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் ரத்த அழுத்த கட்டுப்பாடும் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், மேலும் பார்வைத் திறனை அதிகரிக்கும் நினைவாற்றலை கூட்டும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், உடலின் நச்சுக்களை மேம்படுத்தும் வயிறு சீரனப் பிரச்சனைகளை சரிப்படுத்தும் குடல் புழுக்கள் நீங்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் பாஸ்பரஸ் சத்து தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது, இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆரோக்கியமாக இருக்க உதவும்..!!