ஒரே வீட்டில் 2 மனைவிகளுடன் வாழ்ந்தவர் கொலை..!!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள தேவாங்கர் நகரில் வசித்து வந்தவர் அண்ணாதுரை. இவருக்கு பத்மினி மற்றும் லலிதா என இரண்டு மனைவி. ஒரே வீட்டில் கீழ் தளத்தில் லலிதாவையும், முதல் மாடியில் பத்மினியையும் குடி அமர்த்தியுள்ளார். கடந்த டிச. 24ம் தேதி அண்ணாதுரை குடித்து விட்டு தகராறு செய்தபோது, ஆத்திரமடைந்த பத்மினி கணவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்து மூச்சு திணறியபோது, கணவரை பத்மினி நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. 2வது மனைவி லலிதா அளித்த புகாரின் பேரில் போலீஸ் பத்மினியை கைது செய்தனர்.

Read Previous

பிரான்ஸிலிருந்து பத்திரமாக மும்பை வந்த விமானம்..!!

Read Next

2வது திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் பசுபதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular