
33 ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதியுடன் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2028ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற உள்ளது. இதில் புதிதாக 5 போட்டிகள் சேர்க்கப்பட இருக்கும் நிலையில், அதில் கிரிக்கெட் போட்டியும் ஒன்று என ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி T20 உலகக் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை ஒலிம்பிக் நிர்வாகம் இணையத்தில் பகிர்ந்து இருப்பதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் கிரிக்கெட் இடம் பெறுகிறது. கடைசியாக 1900ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது.