
உடல் எடையை அதிகரிப்பது மற்றும் தசையை வளர்ப்பது பலருக்கு சவாலான பயணமாக இருக்கலாம். மேலும் பல நேரங்களில், உங்கள் எடை அதிகரிப்பு பயணம் வளர்சிதை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலும் உணவு, உடற்பயிற்சி மற்றும் சில சமயங்களில் மருத்துவ வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த பழங்களை தினசரி உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றினால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும். வாழைப்பழம், பட்டர் ப்ரூட், மாம்பழம், பேரீட்சை, உலர் அத்திப்பழம், பலாப்பழம், மாதுளை, ஆப்பிள் உள்ளிட்டவற்றை அடிக்கடி சாப்பிட்டு வரும் போது, உடல் எடை அதிகரிக்கும்.