ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது அமைச்சர் சேகர்பாபுக்கு தமிழிசை பதிலடி..!!

குளத்தில் கூட தாமரை வளர கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்…

போரூரில் பதினாறு புள்ளி 60 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 12.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பசுமை பூங்காவின் பணிகளை நேற்று அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்து இருப்பதை அதிகாரியிடம் சுட்டிக்காட்டி அமைச்சர் சேகர்பாபு குளத்தில் கூட தாமரை வளர்க்க கூடாது என்று கிண்டலாக பேசினார், அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சைக் கேட்டு அதிகாரிகள் சிரித்தனர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில் அதனை கிண்டல் அடிக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த நிலையில் குளத்தில் கூட தாமரை வரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார், இது தொடர்பாக தமிழிசை கூறியதாவது..
குளத்தில் தாமரை மலர்வதை கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரதான் போகிறது அதை கண்டு நீங்கள் அலரதான் போகிறீர்கள் தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்க தான் போகிறீர்கள் என தெரிவித்துள்ளார் மூத்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்..!!

Read Previous

தொடர்ந்து வசூலை குவிக்கும் அமரன் திரைப்படம்…!!

Read Next

நடிகர் விஜய் அரசியலில் சாதிக்க வாய்ப்பே இல்லை.. ரஜினிகாந்தின் சகோதரர் பரபரப்பு பதில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular