ஓஎன்ஜசி-க்கு அனுமதி தரக்கூடாது – ராமதாஸ் வலியுறுத்தல்..!!

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தரக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விளைநிலங்களை மலடாக்கி, பாலைவனமாக்கும் ஓஎன்ஜிசி-யின் திட்டம் மிகவும் ஆபத்தானது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு வெளியில் ராமநாதபுரம் மாவட்டம் இருந்தாலும்கூட, அங்கும் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் காக்க வேண்டியது கட்டாயம் என கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் கோளாறு..!!

Read Next

சசிகலா வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular