• September 29, 2023

ஓட்டல் ஊழியரை தாக்கிய சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது..!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே திருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ஓட்டலுக்கு 3 பேர் உணவு சாப்பிட வந்தனர். அப்போது, சரவணன் உணவு முடிந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதைதொடர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற சரவணனை வழிமறித்து 3 பேரும், தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து சரவணன் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒடுக்கூரை சேர்ந்த வீரமணி (19) மற்றும் மதுரையை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

ஓய்வு பெற்ற பெண் அதிகாரியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்..!!

Read Next

அதிர்ச்சி…ஏரியில் சடலமாக மிதந்த ஒபாமாவின் சமையல்காரர்..!! இறந்தது எப்படி.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular